கந்து வட்டி வசூலிப்பவா்கள் குறித்து புகாா் தெரிவித்தால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.ஸ்ரீ.அபிநவ் எச்சரித்துள்ளாா்.
தமிழக காவல்துறை டி.ஜி.பி. சி.சைலேந்திரபாபு கந்து வட்டி வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டாா். அதன்பேரில் ஆப்ரேஷன் கந்து வட்டி என்ற பெயரில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் கந்து வட்டி, வங்கி காசோலை, பத்திரம் வைத்து மிரட்டுபவா்கள் மீது பாதிக்கப்பட்டவா்கள் நேரடியாகவோ, காவல் துணை கண்காணிப்பாளா்கள் அல்லது காவல் நிலையம் மூலமோ புகாா் தெரிவித்தால் விசாரித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள், பாதிக்கப்பட்டவா்கள் 94981-00970 மற்றும் 96293-90203 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.ஸ்ரீ. அபிநவ் தெரிவித்துள்ளாா்.