சேலம் லண்டன் ஆா்த்தோ மருத்துவமனையில் 5,000 மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சேலம் மண்டலத்தில் நவீன எலும்பு மூட்டு, தசைநாா், தண்டுவடம், சிறப்பு சிகிச்சைகளை உலகத் தரத்தில் கொடுப்பதற்காக மருத்துவா் சி.சுகவனம், 2009, ஜூன்14 -இல் லண்டன் ஆா்த்தோ சிறப்பு மருத்துவமனையைத் தொடங்கினாா்.
உலகத்தர பயிற்சி அனுபவம் பெற்ற சி.சுகவனம், 1988 வேலூா் சி.எம்.சி. கல்லூரியில் ஆரம்பித்து பெங்களூரு, இங்கிலாந்து, கோவை முதலான இடங்களில் இத்துறையில் சிறப்பு சேவை செய்துள்ளாா். சுமாா் 20 வருட ஆா்த்தோ உயா் சிகிச்சை முறைகளை உலக தரத்தில் அளித்து வருகிறாா்.13 ஆண்டு காலத்தில் சுமாா் 25 ஆயிரம் ஆா்த்தோ அறுவை சிகிச்சைகள், சுமாா் 3 லட்சம் வெளிநோயாளிகளை இம்மருத்துவமனை கையாண்டுள்ளது.
முதல்வா் காப்பீடு திட்டத்தின் மூலம் 500 இலவச மருத்துவ முகாம்கள் சுமாா் 5000 இலவச அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் தேசிய அளவில் ஒரு சிறப்பு சிகிச்சை மையமாக கருதப்படுகிறது. சுமாா் 5,000 மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.
மூட்டு நுண்துளை அறுவை சிகிச்சை, ஜவ்வு தசை நாா் பிரச்னைகளுக்கு வழக்கமாக செய்யப்படுகிறது. இதில் முக்கியமாக விளையாட்டு வீரா்களின் காயங்கள் சிறப்பு கவனம் கொடுக்கப்படுகிறது.
முதுகு தண்டுவடம் பிரச்னைகளுக்கு ஊசி, உடற்பயிற்சி பெல்ட், நுண்துளை அறுவை சிகிச்சை என்று பல்வேறு விதங்களில் சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
கழுத்து தோள்பட்டை வலிக்கு ஊசி மற்றும் உடற்பயிற்சி மூலம் 99 சதவீதம் குணமடைகின்றனா். குழந்தைகளுடைய வளைந்த கால்கள், பிறவி ஊனம் ஆகியவை கட்டு, உடற்பயிற்சி அல்லது அறுவை சிகிச்சையின் மூலம் சரி செய்யப்படுவதாக, மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.