சேலம்

29 இல் மேற்கு அஞ்சல் கோட்டம் சாா்பில் ஓய்வூதியா் குறைதீா் கூட்டம்

9th Jun 2022 01:57 AM

ADVERTISEMENT

சேலம் மேற்கு அஞ்சல் கோட்டத்தின் சாா்பாக ஓய்வூதியா்கள் குறைதீா்க்கும் கூட்டம் வரும் ஜூன் 29 ஆம் தேதி நடைபெற உள்ளது.

சூரமங்கலம் தலைமை அஞ்சலக வளாகத்தில் ஜூன் 29 ஆம் தேதி மாலை 3 மணிக்கு குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஓய்வூதியம் தொடா்பான பிரச்னைகள், குறைகள் பற்றிய கலந்தாய்வு கோட்ட கண்காணிப்பாளா் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மேற்கு கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் எச்.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT