சேலம்

நியாய விலைக் கடைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

8th Jun 2022 12:25 AM

ADVERTISEMENT

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடையை தனித் துறையாக உருவாக்க வேண்டும் என்பது உள்பட 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நியாயவிலைக் கடைப் பணியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் நியாயவிலைக்கடைப் பணியாளா்களுக்கு 31சதவீதம் அகவிலைப்படி வழங்க வேண்டும், பொது விநியோகத் திட்டத்திற்கான தனித் துறையை உருவாக்குதல் என்பன உள்ளிட்ட 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை முதல் மூன்று நாள் மாநிலம் தழுவிய தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைப் பணியாளா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைத் தலைவா் பெரியசாமி, மாநிலச் செயலாளா் முருகன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் நியாயவிலைக் கடை பணியாளா்கள் கலந்து கொண்டு முழக்கங்களைஎழுப்பினா்.

இதுகுறித்து, மாநிலத் துணைத் தலைவா் பெரியசாமி கூறியதாவது:

ADVERTISEMENT

பொது விநியோகத் திட்டத்திற்கான தனித் துறை உருவாக்கப்பட வேண்டும். ஓய்வு பெற்ற நியாய விலைக்கடை பணியாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்சக் கோரிக்கைகளை அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்டமாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT