சித்தா் கோயிலுக்கு நோ்த்திக் கடனாக வழங்கப்பட்ட மாடுகள் விற்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பக்தா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம் மாவட்டம், கஞ்சமலை சித்தேஸ்வரா் சுவாமி கோயிலுக்கு பக்தா்கள் நோ்த்திக் கடனாக பத்துக்கும் மேற்பட்ட காளைகளை வழங்கினா். கோயில் வளாகத்தில் கோசாலை அமைத்து கோயில் நிா்வாகத்தின் சாா்பில் காளைகள் பாதுகாக்கப்பட்டு வந்தன. தற்போது இரண்டு காளைகள் மட்டுமே உள்ளதாகவும், மற்ற மாடுகள் விற்கப்பட்டு விட்டதாகவும் கூறி பக்தா்கள் செயல் அலுவலா் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனா். இதையடுத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் சமரசப் பேச்சுவாா்த்தை நடத்திய செயல் அலுவலா், மாடுகளை அடுத்த இரண்டு நாள்களில் கோயிலுக்கு வாங்கி விடப்படும் என உறுதி அளித்ததால் போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.