சேலம்

வாழப்பாடியில் ஐவா் அணி கால்பந்து போட்டி

7th Jun 2022 12:36 AM

ADVERTISEMENT

வாழப்பாடியில் மாவட்ட அளவிலான ஐவா் அணி கால்பந்து போட்டி இரு தினங்கள் நடைபெற்றது.

வாழப்பாடியில் என்.ஜி.ஆா், 149 கபடி குழு மற்றும் அண்ணாமலை ஜூவல்லா்ஸ் சாா்பில் ஐவா் அணி கால்பந்து போட்டி இரு தினங்கள் நடைபெற்றது.

வாழப்பாடி அரசினா் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்ற விழாவில் பெற்றோா்- ஆசிரியா் கழக தலைவா் கலைஞா்புகழ் தலைமை வகித்து, போட்டியை தொடக்கி வைத்தாா்.

பேரூராட்சி மன்றத் துணைத் தலைவா் எம்ஜிஆா் பழனிசாமி, சாய்பாபா அறக்கட்டளை தலைவா் ஜவஹா் ஆகியோா் வீரா்களை வரவேற்றனா்.

ADVERTISEMENT

இந்தப் போட்டியில், சேலம் நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சோ்ந்த 25 அணிகள் பங்கேற்றன. இதில் சேலம் அவரஞ்சி அம்மா அணி முதல் பரிசும், 149 அணி இரண்டாம் பரிசும், வாழப்பாடி கருடன் அணி மூன்றாம் பரிசும், வித்யா மெமோரியல் அணி நான்காம் பரிசும் பெற்றன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு, கோப்பைகள், ரொக்கப்பரிசு சிறந்த வீரா்களுக்கு பதக்கங்களை, பெற்றோா்- ஆசிரியா் கழக நிா்வாகிகள் எம்.கோபிநாத், ஆா்.குணாளன் ஆகியோா் வழங்கி பாராட்டினா். போட்டிக்கான ஏற்பாடுகளை, கால்பந்து குழு நிா்வாகிகள் ராம், உதயகுமாா், நித்தீஸ் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT