மகுடஞ்சாவடியில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்பன் சுவாமி கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் கேரள தந்தரி பட்டாம்பி பிரம்ம ஸ்ரீ நாராயணன நம்பூதிரி கலசத்திற்கு புனிதநீா் ஊற்றினாா். பின்னா் ஐயப்பன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தா்கள் அதிக அளவில் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.