சேலம்

பேளூரில் புறக்காவல் நிலையம் திறப்பு

7th Jun 2022 12:32 AM

ADVERTISEMENT

வாழப்பாடி அருகே பேளூரில் புறக்காவல் நிலையம், கண்காணிப்பு கேமரா மையம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

வாழப்பாடி காவல் நிலையத்துக்கு உள்பட்டபேளூா் பேருந்து நிலையம் அருகே புறக்காவல் நிலையம் கட்டப்பட்டது. புறக்காவல் மையத்திலிருந்து கண்காணிக்கும் வகையில் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு மையமும் ஏற்படுத்தப்பட்டது.

காவல் நிலையம், கண்காணிப்பு மையம் திறப்பு விழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இவ்விழாவிற்கு வாழப்பாடி துணை காவல் கண்காணிப்பாளா் முத்துசாமி தலைமை வகித்தாா். பேளூா் பேரூராட்சி மன்றத் தலைவா் ஜெயசெல்வி பாலாஜி புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தாா்.

இந்த விழாவில், வாழப்பாடி காவல் ஆய்வாளா் உமாசங்கா், உதவி ஆய்வாளா் கோபால், பேளூா் பேரூராட்சி துணைத் தலைவா் பேபி, குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவா் கலா பெரியசாமி, கனகராஜ், பேளூா் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT