சேலம்

அரசு இசைப்பள்ளியில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

6th Jun 2022 12:09 AM

ADVERTISEMENT

 சேலம் அரசு இசைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து ஆட்சியா் செ.காா்மேகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் சேலம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் பாரம்பரிய கலைகளான குரலிசை (பாட்டு), நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சி வகுப்புகள் வார நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. 13 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் சேரலாம். பயிற்சி காலம் மூன்று ஆண்டுகள். பயிற்சி முடிவில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

பயிற்சிக்கு கட்டணம் இல்லை, சோ்க்கை கட்டணமாக ஆண்டிற்கு ரூ. 350 மட்டும் செலுத்தப்பட வேண்டும். மாணவ மாணவியருக்கு இலவச பேருந்து பயணச்சலுகை அளிக்கப்படுகிறது.

இசைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ. 400 வழங்கப்படுகிறது.

மூன்று ஆண்டு சான்றிதழ் படிப்பிற்கு பிறகு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இசை ஆசிரியா் பயிற்சியில் சேர வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

இசைப் பள்ளியில் சோ்க்கை விண்ணப்பம் பெற தலைமை ஆசிரியா், மாவட்ட அரசு இசைப்பள்ளி, தளவாய்ப்பட்டி-திருப்பதி கவுண்டனூா் சாலை, அய்யம்பெருமாம்பட்டி அஞ்சல், சேலம் - 636 302 எனும் முகவரியில் நேரிலோ அல்லது சுயமுகவரியிட்ட அஞ்சல் உறை இணைத்து அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு 0427 2906197 மற்றும் 75026 11005 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT