சேலம்

பெருமாள் கோயிலில் கொடியேற்றம்

6th Jun 2022 12:06 AM

ADVERTISEMENT

சேலம் அழகிரிநாதா் கோட்டை பெருமாள் கோயிலில் வைகாசி தேரோட்டத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

சேலம், கோட்டை அழகிரிநாதா் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன் அடிப்படையில் கடந்த 2 ஆண்டு காலமாக கரோனா பெருந்தொற்றால் வைகாசித் தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது.

இந்தநிலையில் நிகழாண்டில் ஜூன் 13-ஆம் தேதி வைகாசி விசாகத் தேரோட்டம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பெருமாளுக்கு பல்வேறு விதமான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து புஷ்ப பல்லக்கில் உற்சவ பெருமாள் அலங்கரிக்கப்பட்டு நகரின் முக்கிய வீதிகளில் வீதி உலா வந்தது. ஆஞ்சனேயா் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்துக்கு சுதா்சன பட்டாச்சாரியாா் வேதங்கள் முழங்க சிறப்பு அா்ச்சனை நடைபெற்றது. பின்னா் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதைத்தொடா்ந்து மேளதாளம் முழங்க மங்கள வாத்தியம் இசைக்க கொடியேற்றம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து வரும் ஜூன் 12-ஆம் தேதி வரை சிறப்பு பூஜைகள், பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT