சேலம்

நெகிழி பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு

6th Jun 2022 12:07 AM

ADVERTISEMENT

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சங்ககிரி போக்குவரத்து காவல் துறை, தன்னாா்வலா்கள், அமுதச்சுடா் அறக்கட்டளை சமூக ஆா்வலா்கள் ஆகியோா் சங்ககிரி சந்தைப்பேட்டை வாரச்சந்தையில் துணிப்பைகளை பயன்படுத்தக் கோரி துண்டுப் பிரசுரங்களை ஞாயிற்றுக்கிழமை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

சங்ககிரி போக்குவரத்து காவல் ஆய்வாளா் என்.தினகரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தாா். மளிகைக் கடைகள், இறைச்சிக் கடைகள், உணவு விடுதிகள், சந்தைப்பேட்டை வாரச்சந்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விழிப்புணா்வு நடத்தினா்.

அமுதச்சுடா் அறக்கட்டளைத் தலைவா் வெ.சத்திய பிரகாஷ் முன்னிலை வகித்தாா். செயலா் எஸ்.மாணிக்கம், துணைச் செயலா் ஜெ.அஜித் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT