சேலம்

ஜூன் 10-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

2nd Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

எடப்பாடி அரசு கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் சிறப்பு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூன் 10-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் செ.காா்மேகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சேலம் மாவட்டம், எடப்பாடி பகுதியைச் சோ்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், பெண்கள் பயன்பெறும் வகையில், ஜூன் 10-ஆம் தேதி எடப்பாடி அரசு கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் சிறப்பு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாமில், உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம், கல்வி உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சோ்ந்த சேலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முன்னணி நிறுவனங்கள் தங்களின் காலிப் பணியிடங்களுக்கு பணியாளா்களை தோ்வு செய்யவுள்ளன.

ADVERTISEMENT

எடப்பாடி அரசு கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் இம்முகாமில், 8, 10, பிளஸ் 2 வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியா், ஆசிரியா், தொழிற்கல்வி போன்ற அனைத்துவித கல்வித்தகுதி உள்ளவா்களும் கலந்துகொள்ளலாம்.

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநா்களும் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

மேலும் விவரங்களுக்கு த்ர்க்ஷச்ஹண்ழ்ம்ஸ்ரீஸ்ரீள்ஹப்ங்ம்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் வாயிலாகவும், 0427 - 2401750 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT