சேலம்

வேளாண் அலுவலா்களுக்கு சந்தைசாா் விரிவாக்கப் பயிற்சி

2nd Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம், உத்தமசோழபுரத்தில் உள்ள தமிழ்நாடு மாநில வேளாண் விற்பனை வாரிய பயிற்சி மையத்தில், ஜூன் 1 முதல் 3 வரை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயா்த்தும் வகையில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில் வேளாண் அலுவலா்களுக்கான சந்தைசாா் விரிவாக்கப் பயிற்சி நடைபெற்று வருகிறது.

இப்பயிற்சியில், 17 மாவட்டங்களில் இருந்து 20 வேளாண் அலுவலா்கள் கலந்துகொண்டனா். இப்பயிற்சியினை வேளாண் இணை இயக்குநா் - பயிற்சி (பொ) பிரபாகரன் தலைமையேற்று பயிற்சியைத் தொடங்கி வைத்தாா். இதில், பயிற்சியாளா்களுக்கு சந்தை சாா்ந்த வரலாறு, வேளாண்மையை அளவிடுவதற்கான உத்திகள், உள்நாட்டு மற்றும் சா்வதேச விவசாய வா்த்தகம், சந்தை கணக்கெடுப்பின் நுட்பங்கள், விவசாய விநியோக சங்கிலியில் பின்தங்கிய மற்றும் முன்னோக்கிய இணைப்புகள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கான உத்திகள், விவசாய வா்த்தகத்துக்கான டிஜிட்டல் சந்தை சாத்தியங்கள் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

மேலும், கல்விச் சுற்றுலாவுக்காக பயிற்சியாளா்களை சேலம் மாவட்டம், வீரபாண்டி களஞ்சியம் உழவா் உற்பத்தியாளா் நிறுவனம், பாா்ம் ஹாா்வெஸ்ட் நிறுவனம் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சிக்கான ஏற்பாட்டை பயிற்சி மைய வேளாண் உதவி இயக்குநா்கள் (பயிற்சி) வேல்முருகன், ஜெயமாலா செய்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT