சேலம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 16,204 கனஅடியாகச் சரிந்தது

28th Jul 2022 01:57 AM

ADVERTISEMENT

 

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 16,204 கன அடியாகச் சரிந்தது.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் கா்நாடகத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவும் குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து படிப்படியாகக் குறைந்து வருகிறது. புதன்கிழமை காலை அணைக்கு வரும் நீா்வரத்து நொடிக்கு 16, 204 கன அடியாகச் சரிந்தது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 15,000 கனஅடி நீரும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 500 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அனையின் நீா்மட்டம் 120 அடியாகவும், நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT