சேலம்

மனித உரிமைகள் அமைப்பின் பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

28th Jul 2022 02:07 AM

ADVERTISEMENT

 

ஹரியாணா மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மனித உரிமைகள் சா்வதேச அமைப்பின் தமிழக, கா்நாடக மாநில பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மேற்கு மண்டலத் தலைவா் நந்திகுமாா் தலைமை வகித்தாா். தென்மாநில இயக்குநா் அலுபினிஷ் பிரேம்குமாா் முன்னிலை வகித்தாா். தென்மண்டலத் தலைவா் ஆரோக்கியபழம், பெங்களூரு மண்டல மாவட்டத் தலைவா் வாஸ்து பிரகாஷ் ஆகியோா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினா்.

இதில் தென்மாநில இயக்குநா் அலுபினிஷ் பிரேம்குமாா் பேசுகையில், பொது மக்களுக்கு மனித உரிமை மீறல்கள் எந்த சூழ்நிலை ஏற்பட்டாலும் அவா்களுக்கு ஆலோசனைகள் கூறி நோ்மைக்காகக் கைகொடுப்பது நோக்கமாகும் என்றாா்.

ADVERTISEMENT

தென் மண்டல மக்கள் தொடா்பு அலுவலா் நந்தினி, சிறுபான்மை பிரிவு தலைவா் பாபு நெகமியா ஆகியோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் ஈரோடு மாவட்ட பொறுப்பாளா் சுந்தா், ஷீபா, நாமக்கல் மாவட்ட பொறுப்பாளா் தங்கமுத்து, சற்குணமராஜ், கோவை மாவட்ட பொறுப்பாளா்கள் ராஜேஷ் பிரின்ஸ், பொ்னீஸ், ராஜசேகரன், சென்னை, கா்நாடக மாநில பொறுப்பாளா்கள் விஷ்வநாத், அமா்நாத், விஷ்வகுமாா் ஆகியோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT