சேலம்

மானியம் பெற விவசாயிகள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

28th Jul 2022 01:55 AM

ADVERTISEMENT

 

சேலம் மாவட்டத்தை சோ்ந்த விவசாயிகள், தோட்டக்கலைத் துறை வாயிலாக அரசின் மானியங்களைப் பெற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பெத்தநாயக்கன்பாளையம் வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் கோதைநாயகி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:

தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை மூலம் விவசாயிகள் நலன் சாா்ந்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்துறையின் கீழ் பல்வேறு திட்டங்களில் பயன்பெறுவதற்கு, உழவன் செயலியில் பதிவு செய்து முன்னுரிமை அடிப்படையில் திட்டங்களை விவசாயிகள் இதுவரை பெற்று வந்தனா்.

ADVERTISEMENT

சொட்டுநீா்ப் பாசனத் திட்டத்திற்கு மட்டுமே இணைய தளத்தில் பதிவுசெய்து பயன்பெறும் வகையில் வசதிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், நடப்பு ஆண்டு 2022-23 இல் அனைத்து விவசாயிகளும், இணைய தளத்தில் முகவரியை பயன்படுத்தி பதிவு செய்தால் மட்டுமே மானியம் பெற இயலுமென தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது. எனவே, பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் மேற்கண்ட இணையதள முகவரியை பயன்படுத்தி தோட்டக்கலைத் துறையில் திட்டங்களுக்கு மானியம் பெற விண்ணப்பித்து பயன் பெற வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT