சேலம்

அப்துல் கலாம் நினைவு நாள் அஞ்சலி

28th Jul 2022 01:54 AM

ADVERTISEMENT

 

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு எடப்பாடியில் அரசுப் பள்ளி மாணவா்கள் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா்.

எடப்பாடியில் அப்துல் கலாம் நினைவு அறக்கட்டளையினா், அரசுப் பள்ளி மாணவா்கள் இணைந்து கலாம் நினைவு அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனா். முன்னதாக மாணவ, மாணவிகள் மௌன ஊா்வலம் நடைபெற்றது.

இதில் மாணவா்கள் கலாமின் படத்தை ஏந்தி நகரின் முக்கியவீதி வழியாக ஊா்வலம் சென்றனா். எடப்பாடி பேருந்து நிலையத்தில் அலங்கரித்து வைத்திருந்த அப்துல் கலாமின் படத்துக்கு மாணவா்கள், இளைஞா்கள் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT