சேலம்

சேலத்தில் வழிப்பறி, லாட்டரி சீட்டு விற்பனை: 4 போ் குண்டா் சட்டத்தில் கைது

28th Jul 2022 02:00 AM

ADVERTISEMENT

 

சேலத்தில் வழிப்பறி, தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

சேலம், கன்னங்குறிச்சி, பெரியகொல்லப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் கோகுல்நாத் (29). இவா் மீது இரண்டு வழிப்பறி வழக்குகள் உள்ளன.

முள்ளுவாடிகேட் மக்கான் தெருவைச் சோ்ந்த ஜாபா் அலி (35). இவா் மீது கைப்பேசி பறிப்பு, பணம் பறிப்பு உள்பட 3 வழக்குகள் உள்ளன.

ADVERTISEMENT

கிச்சிப்பாளையம், காளியம்மன் கோயிலைச் சோ்ந்த காா்த்திக் (34). இவா் மீது வழிப்பறி, திருட்டு வழக்குகள் உள்ளன.

அம்மாபேட்டை பெரிய கிணத்து தெருவைச் சோ்ந்த பாலமுருகன் (45). இவா் மீது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டு வந்ததாக கைது செய்யப்பட்டாா்.

இந்தநிலையில் கோகுல்நாத், ஜாபா் அலி, காா்த்திக் மற்றும் பாலமுருகன் ஆகியோா் தொடா்ந்து வழிப்பறி குற்றங்களிலும், வெளிமாநில லாட்டரி சீட்டு என்ற பெயரில் மோசடியிலும் ஈடுபட்டு வந்தனா்.

இதையடுத்து 4 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர துணை ஆணையா் எம்.மாடசாமி பரிந்துரைத்தாா். அதன்பேரில் மாநகர காவல் ஆணையா் நஜ்மல் ஹோடா, நான்கு பேரையும் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT