சேலம்

சாயப்பட்டறை கழிவுகளால் நுரைகளால் மூழகிய தரைப்பாலம்

27th Jul 2022 06:05 PM

ADVERTISEMENT

சேலம்: சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் அதிக அளவு நுறை ஏற்பட்டதன் காரணமாக தரைப்பாலம் நுரைகளால் மூழ்கியது.

சேலம் மாநகராட்சி பகுதியில் திருமணிமுத்தாறு ஓடுகிறது. ஒரு காலத்தில் மாநகர மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கிய இந்த திருமணிமுத்தாறு தற்போது கழிவுநீர் வெளியேறும் கால்வாயாக செயல்பட்டு வருகிறது.

மாநகராட்சியின் பல்வேறு பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுகள் இந்த ஆற்றில் கலக்கப்படுகிறது. இதுதவிர திருமணிமுத்தாறின் கரையோரங்களில் உள்ள அனுமதி பெறாத சாயப்பட்டறைகள் இருந்து அதிகளவு சாய கழிவுகள் வெளியேற்றப்படுவதால் நுரை அதிகளவில் உருவாகிறது.

இந்த நுரைகள் அனைத்தும் கொண்டலாம்பட்டி அருகே உள்ள ஆத்துக்காடு பகுதி தரைப்பாலத்தை மூழ்கடித்துச் செல்கிறது. இதனால் தரைப் பாலத்தில் போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது

ADVERTISEMENT

அந்தப் பகுதியிலிருந்து தரைப் பாலத்தை கடந்து நகரப் பகுதிக்கு வரும் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதனை அடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து வந்து தரைப்பாலத்தை போக்குவரத்திற்கு  பயன்படுத்த தடை விதித்தனர். மேலும் பெரும் மலை போல் பொங்கி இருந்த நுரையை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

இது போன்று அடிக்கடி ஏற்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்   சாட்டியுள்ளனர்.

இதையும் படிக்க: மின்சாரம் பாய்ந்து கட்சி நிர்வாகி பலி: சிபிஐ சாலை மறியல்

எனவே அனுமதி பெறாத சாயப்பட்டறை கழிவுகளை வெளியேற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT