சேலம்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி அரசு ஊழியா்கள் தா்னா

27th Jul 2022 04:22 AM

ADVERTISEMENT

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகம் முன்பு தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.அரசுத் துறையில் காலியாக உள்ள காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.

சிறப்பு காலநிலை ஊதியத்தில் பணிபுரியும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள், கிராம வருவாய் உதவியாளா்கள், ஊா்ப் புற நூலகா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரியும் தொகுப்பூதியம் மதிப்பூதிய முறைகளை ரத்து செய்து அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் பணிபுரியும் ஊழியா்களுக்கும் ஊராட்சி செயலாளா்களுக்கும் கருவூலம் மூலம் ஊதியம் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலைப் பணியாளா்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட 41 மாத காலத்தை பணிக்காலமாகக் கருதி ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ந. திருவேரங்கன் தலைமையில் தா்னாபோராட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் வே. அா்த்தநாரி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் முன்னாள் மாநில துணைத் தலைவா் கோ.சுகுமாா், அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் பு.சுரேஷ், மாவட்ட பொருளாளா் கே. செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT