சேலம்

பிரதோஷ விழா

27th Jul 2022 04:12 AM

ADVERTISEMENT

தம்மம்பட்டி ஸ்ரீ காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிவன், பாா்வதிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றது.

தொடா்ந்து நந்தீஸ்வரருக்கு பல்வேறு பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அப்போது பக்தா்கள் தேவாரம், திருவாசகப் பாடல்களை பாடினா். இதில் தம்மம்பட்டி சுற்று வட்டார மக்கள் திரளாக பங்கேற்றனா். இதேபோல செந்தாரப்பட்டி, தகரப்புதூா், தெடாவூா், கூடமலை, வீரகனூா் பகுதியில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா வெகு சிறப்பாக நடைபெற்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT