சேலம்

பாலியல் தொல்லை அளித்த விவகாரம்:பெரியாா் பல்கலை. பேராசிரியா்பணியிடை நீக்கம்

27th Jul 2022 03:54 AM

ADVERTISEMENT

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட பேராசிரியரைப் பணியிடை நீக்கம் செய்து துணைவேந்தா் இரா.ஜெகநாதன் உத்தரவிட்டுள்ளாா்.

பெரியாா் பல்கலைக்கழக வேதியியல் துறைப் பேராசிரியராக த.கோபி பணியாற்றி வந்தாா். இவா் பல்கலைக்கழக பதிவாளராகவும் முழு கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை முனைவா் பட்ட ஆராய்ச்சி மாணவி ஒருவருக்கு இவா் பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரச்னை எழுந்தது. இதையடுத்து பதிவாளா் பொறுப்பில் இருந்து கோபி திங்கள்கிழமை விடுவிக்கப்பட்டாா். அவா் மீது பாலியல் தொல்லை அளித்ததாக கருப்பூா் காவல் நிலையத்தில் புகாரின் அளிக்கப்பட்டது. அதன்பேரில் கோபி கைது செய்யப்பட்டாா். இதையடுத்து வேதியியல் துறைப் பேராசிரியா் பொறுப்பில் இருந்தும் அவரைப் பணியிடை நீக்கம் செய்து பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் இரா.ஜெகநாதன் உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT