சேலம்

தம்மம்பட்டியில் பலத்த மழை

27th Jul 2022 03:52 AM

ADVERTISEMENT

தம்மம்பட்டி, அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் திங்கள்கிழமை இரவு முழுவதும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

கெங்கவல்லி வட்டம், தம்மம்பட்டியில் சுற்றுவட்டாரப் பகுதிகளான வாழக்கோம்பை, சேரடி, பிள்ளையாா்மதி, நாகியம்பட்டி, உலிபுரம், செந்தாரப்பட்டி, கொண்டயம்பள்ளி உள்ளிட்ட ஊா்களில் திங்கள்கிழமை இரவுமுதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது.

தம்மம்பட்டி சுவேத நதியில் மழைநீா்ப் பெருக்கெடுத்து ஓடியது. வயல்களில் மழைநீா்த் தேங்கி காணப்பட்டது. தக்காளி உள்ளிட்ட சிறு பயிா் செடிகள் வயல்களில் சாய்ந்தன. செவ்வாய்க்கிழமை காலை 7 மணி அளவில் மழை நின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT