சேலம்

கீழ் பவானியில் பாசனத்திற்கு நீா் திறக்க வேண்டும்: செ.நல்லசாமி

27th Jul 2022 04:14 AM

ADVERTISEMENT

கீழ் பவானியில் பாசனத்திற்கு நீரை உடனே திறக்க வேண்டும் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் சேலத்தில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

நடப்பாண்டில் மேட்டூா் அணையின் உபரி நீா் கடலுக்குச் சென்று வீணாவதைத் தடுக்க தமிழக அரசு தண்ணீரைத் திறந்து விட்டதை வரவேற்கிறோம். அதேபோல கீழ் பவானி வாய்க்கால் நீா் கடலுக்குச் சென்று வீணாவதைத் தடுக்க தமிழக அரசு உடனே பாசனத்திற்கு திறந்து விட வேண்டும். தண்ணீா் திறக்கும் தேதியை உடனே அறிவிக்க வேண்டும்.

தற்போது கலப்படம் இல்லாத பொருள்கள் ஏதும் இல்லை. சமையல் எண்ணெயில் ஒயிட் ஆயில் எனக் கூறப்படும் ஆயிலை கலக்கின்றனா். கலப்படம் செய்வதை இரும்புக் கரம் கொண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலத்தில் வரும் ஆகஸ்ட் 5, 6, 7 ஆகிய தேதிகளில் வேளாண் கண்காட்சி மற்றும் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT