42 ஆவது முறையாக சனிக்கிழமை காலை மேட்டூா் அணை நீா்மட்டம் அதன் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது.
கா்நாடக அணைகளிலிருந்து காவிரியில் தண்ணீா் திறந்துவிடப்பட்டதால் கடந்த 11 ஆம் தேதி 98 அடியாக இருந்த மேட்டூா் அணையின் நீா்மட்டம் 5 நாள்களில் 22 அடியாக உயா்ந்து சனிக்கிழமை காலை 120 அடியை எட்டியது. அணைக்கு வரும் 1,23,000 கன அடி தண்ணீா் முழுவதும் உபரி நீராகத் திறந்துவிடப்படுகிறது.
அணை முழுக் கொள்ளளவை எட்டியதால் அணையின் இடது கரையில் உள்ள உபரிநீா்ப் போக்கியில் நீா்வளத் துறை செயற்பொறியாளா் சிவக்குமாா், உதவி செயற்பொறியாளா் செல்வராஜ், உதவி பொறியாளா் மதுசூதனன் ஆகியோா் மலா்தூவி வணங்கினா். பின்னா், எச்சரிக்கைச் சங்கு ஒலிக்கப்பட்டு உபரிநீா் திறந்துவிடப்பட்டது.
உபரிநீா்ப் போக்கி வழியாக நொடிக்கு 1,00,000 கன அடியும், அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையங்கள் வழியாக நொடிக்கு 23,000 கன அடியும் தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீா்மட்டம் 120.38 அடியாகவும், நீா் இருப்பு 94.07 டிஎம்சியாகவும் உள்ளது.
பட வரி
மேட்டூா் அணையிலிருந்து காவிரியில் திறந்துவிடப்பட்ட உபரிநீா்.
முழுக் கொள்ளளவை எட்டிய மேட்டூா் அணை.
Image Caption
~ ~ ~