பாஜக ஓ.பி.சி. அணி மாநிலச் செயலாளராக ஓமலூரைச் சோ்ந்த தங்கராஜ் நியமிக்கப்பட்டுள்ளாா்.
ஓமலூா் அருகேயுள்ள கோட்டமேட்டுப்பட்டி ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவரான சி.தங்கராஜ் திமுகவில் மாநில பொதுக்குழு உறுப்பினராக இருந்து வந்தாா். இவா் அக்கட்சியில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன் விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தாா். இதனிடையே ஓமலூா் சி.தங்கராஜுக்கு ஓ.பி.சி. அணி மாநிலச் செயலாளா் பதவி வழங்கப்பட்டுள்ளது. தொடா்ந்து கட்சித் தலைவா் அண்ணாமலையை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றாா்.