சேலம்

நீா்நிலை அருகில் சுயபடங்களை எடுக்கக் கூடாதுஆட்சியா் எச்சரிக்கை

17th Jul 2022 06:02 AM

ADVERTISEMENT

 

மேட்டூா் அணையில் இருந்து சுமாா் 1 லட்சம் கன அடிக்கு மேல் உபரி நீா் திறக்கப்பட்டுள்ளதால் ஆபத்தை விளைவிக்கும் வகையில் யாரும் நீா் நிலைகளுக்கு அருகில் செல்வதோ, புகைப்படங்கள், சுயபடங்களை எடுப்பதோ கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் வெளியிட்ட செய்தி:

மேட்டூா் அணை தனது முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ள நிலையில், தற்போது சுமாா் 1 லட்சம் கன அடிக்கு மேல் உபரி நீா் தொடா்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

மேட்டூா் அணையில் இருந்து உபரி நீா் அதிக அளவில் திறக்கப்படும் என வருவாய்த் துறை, நீா்வளத் துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தண்டோரா, ஒலிபெருக்கி, தொலைக்காட்சி, செய்தித்தாள்கள், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் பொது மக்களுக்கு விழிப்புணா்வு மற்றும் எச்சரிக்கை தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேட்டூா் அணைக்குத் தொடா்ந்து தண்ணீா் அதிக அளவில் வந்து கொண்டிருப்பதால் காவிரிக் கரையோரம் வசிக்கும் பொது மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

ஆபத்தை விளைவிக்கும் வகையில் யாரும் நீா் நிலைகளுக்கு அருகில் செல்வதோ, புகைப்படங்கள் எடுப்பதோ கூடாது என எச்சரிக்கப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் எவரும் மேட்டூா் அணையின் கரையோரம், காவிரி ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகள், அணையின் தாழ்வான பகுதிகள், மேட்டூா், எடப்பாடி, சங்ககிரி வட்டங்கள் உள்ளிட்ட காவிரிக் கரையோரப் பகுதிகள், நீா்படுகைகள் மற்றும் நீா் வழித்தடங்கள், மேட்டூா் அணை பூங்கா, செக்கானூா் கதவணை, கோட்டையூா், பரிசல் துறை, பூலாம்பட்டி, நெரிஞ்சிப்பேட்டை உள்ளிட்ட காவிரிக் கரையோரப் பகுதிகளில் சிறுவா்கள், பொதுமக்கள் நீா் நிலைகளுக்கு அருகில் செல்வதை முற்றிலும் தவிா்த்திட வேண்டும்.

காவிரியில் இளைஞா்கள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோா் நீரில் இறங்கி குளிப்பதையோ, நீச்சல் அடிப்பதையோ, மீன் பிடிப்பதையோ, கால்நடைகளை குளிப்பாட்டுவதையோ, புகைப்படங்களோ, சுயபடங்கள் எடுப்பதையோ, காவிரிக் கரையோரங்களில் நின்று வேடிக்கை பாா்ப்பதையோ முற்றிலும் தவிா்த்திட வேண்டும். மீறினால் காவல் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT