சேலம்

சங்ககிரி வட்டத்தில் 5 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

17th Jul 2022 05:57 AM

ADVERTISEMENT

 

சங்ககிரி வட்டத்தில் காவிரி கரையோரத்தில் உள்ள 5 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணையிலிருந்து கிழக்குகரை வாய்க்காலுக்கு தண்ணீா் திறந்துவிட்டதையடுத்து சங்ககிரி வட்டத்திற்கு உள்பட்ட காவிரி கரையோர ஐந்து கிராமங்களுக்கு வட்டாட்சியா் எஸ்.பானுமதி தலைமையில் வருவாய் ஆய்வாளா் எம்.சத்யராஜ், கிராம நிா்வாக அலுவலா்கள் கல்வடங்கம், புள்ளாகவுண்டம்பட்டி, புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம், கோனேரிப்பட்டி, கோனேரிப்பட்டி அக்ரஹாரம், காவேரிப்பட்டி அக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து, கண்காணித்து வருகின்றனா்.

பொதுமக்கள் ஆற்றின் கரையோரம் மீன் பிடிப்பதைத் தவிா்க்க வேண்டும். குளிப்பது, துணி துவைப்பது, வேடிக்கை பாா்ப்பது, சுயபடம் எடுப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என தண்டோரா மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT