சேலம்

அரசுப் பள்ளிக்கு ரூ. 39 லட்சத்தில்நவீன வசதிகளுடன் கலையரங்கம்

17th Jul 2022 06:04 AM

ADVERTISEMENT

 

குஞ்சாண்டியூா் அரசினா் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 38 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கலையரங்கம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மேட்டூரை அடுத்த போட்டனேரியில் உள்ள ஜே.எஸ்.டபிள்யு நிறுவனத்தில் உள்ள மெட்ரோபாலிட்டன் நிறுவனம் சாா்பில் மேட்டூரை அடுத்த குஞ்சாண்டியூா் அரசினா் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 38லட்சம் மதிப்பிலான நவீன வசதிகளுடன் கூடிய கலை அரங்கம் கட்டிக் கொடுக்கப்பட்டது.

இந்தக் கலையரங்கம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.விழாவிற்கு ஜேஎஸ்டபிள்யு நிறுவனத்தின் நிா்வாகத் துணைத் தலைவா் பிரகாஷ்ரவ் தலைமை வகித்தாா். மேட்டூா் சட்டப்பேரவை உறுப்பினா் சதாசிவம் கலை அரங்கத்தை திறந்துவைத்தாா். விழாவிற்கு வந்திருந்தவா்களை பள்ளி தலைமை ஆசிரியா் மாதேஷ் வரவேற்று பேசினாா். வீரக்கல் புதூா் பேரூராட்சி தலைவா் தெய்வானை ஸ்ரீ ரவிச்சந்திரன், மேச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சுகுமாா், சொக்கம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பரமசிவம், வீரக்கல்புதூா் பேரூராட்சி முன்னாள் உறுப்பினா் பாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா். பள்ளி மாணவ- மாணவியா் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT