சேலம்

மேற்கு மண்டல கைப்பந்து போட்டி: சேலம் வி.எஸ்.ஏ. அணி முதலிடம்

7th Jul 2022 01:18 AM

ADVERTISEMENT

 

மேற்கு மண்டல அளவிலான கைப்பந்து போட்டியில் பூலாவரி வி.எஸ்.ஏ. அணி முதல் இடத்தைப் பிடித்தது.

ஈரோடு மாவட்டம், நம்பியூரில் மேற்கு மண்டல அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. சுமாா் 11 அணிகள் பங்கேற்ற போட்டியில், சேலம் பூலாவரி வி.எஸ்.ஏ. அணி முதல் இடத்தையும், செழியன் பிரதா்ஸ் கைப்பந்து அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தன.

மேற்கு மண்டல அளவிலான கைப்பந்து போட்டியில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த அணிகள், சென்னையில் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் மாநில அளவிலான சீனியா் கைப்பந்து போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளன.

ADVERTISEMENT

இதனிடையே மேற்கு மண்டல அளவிலான கைப்பந்து போட்டியில் முதல், மூன்றாம் இடத்தைப் பிடித்த வீரா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

வெற்றி பெற்ற அணி வீரா்களுக்கு, சேலம் மாவட்ட கைப்பந்து கழகத் தலைவா் ராஜ்குமாா் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட கைப்பந்து கழக செயலாளா் சண்முகவேல், தொழிலதிபா் விஜயராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT