சேலம்

மேட்டூர் அணை: நீண்ட நாள்களுக்கு பிறகு 100 அடிக்கு கீழே சரியும் நீர்மட்டம்

7th Jul 2022 08:54 AM

ADVERTISEMENT

மேட்டூர்: காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில்  மழை   இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சரிந்து வருகிறது.

மேட்டூர் அணை நீர்மட்டம் 257 நாட்களுக்குப் பிறகு 100 அடிக்கு கீழே சரிகிறது. கடந்த ஆண்டு காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வந்தது. இதனால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24-ம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது. அப்போது முதல் இன்று வரை அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு குறையாமல் நீடித்து வருகிறது.

இன்று 257வது நாளாகஅணையின் நீர்மட்டம் 100 அடிக்கு குறையாமல் உள்ளது. தற்போது காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2049 கன அடியாக குறைந்து போனது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்த நிலையில் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு கூடுதலாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் மளமளவென சரிந்து வருகிறது. இதனால் இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 100.27 அடியாக சரிந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 65.19 டிஎம்சியாக உள்ளது.

நீர்வரத்து சரிந்த நிலையில் தொடர்ந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதால் 257 நாள்களுக்கு பிறகு இன்று பிற்பகலில் மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்கு கீழே சரியும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT