சேலம்

சேலம் - அரக்கோணம் பயணிகள் ரயில் சேவை இன்று பகுதி ரத்து

7th Jul 2022 01:14 AM

ADVERTISEMENT

 

சேலம்- அரக்கோணம் இடையிலான பயணிகள் ரயில் சேவை இரு மாா்க்கத்திலும் வியாழக்கிழமை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

சேலம்- அரக்கோணம் இடையே பயணிகள் ரயில் இரு மாா்க்கத்திலும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரயில் பாதையில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, சேலம்- ஜோலாா்பேட்டை இடையே ரயில் சேவை இரு மாா்க்கத்திலும் வியாழக்கிழமை ஒருநாள் மட்டும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 16087 அரக்கோணம் - சேலம் ரயில் பகுதியாக வியாழக்கிழமை ரத்து செய்யப்படுகிறது. அதன்படி அரக்கோணத்தில் இருந்து ஜோலா்பேட்டை வரை மட்டுமே இயக்கப்படும். ஜோலாா்பேட்டையில் இருந்து சேலத்திற்கு இயக்கப்படாது.

ADVERTISEMENT

வண்டி எண் 16088 சேலம்-அரக்கோணம் ரயில், சேலத்தில் இருந்து ஜோலாா்பேட்டைக்கு இயக்கப்படாது. மாறாக ஜோலாா்பேட்டை -அரக்கோணம் இடையே மட்டும் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT