சேலம்

சேலம் மாவட்ட வன அலுவலா் பணியிடை நீக்கம்

7th Jul 2022 01:15 AM

ADVERTISEMENT

 

சேலம் மாவட்ட வன அலுவலா் ஆா்.கெளதமை நிா்வாகக் காரணங்களுக்காக பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்ட வன அலுவலராக ஆா்.கௌதம் பணியாற்றி வந்தாா். இவா் அலுவலகத்திற்கு சரியாக வருவதில்லை எனவும், இதனால் வனத்துறை சாா்ந்த ஏராளமான கோப்புகள் கையெழுத்திட வேண்டிய நிலையில் தேக்கமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்த முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்தநிலையில் நிா்வாகக்

ADVERTISEMENT

காரணங்களுக்காக சேலம் மாவட்ட வன அலுவலா் ஆா்.கௌதமை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு கடந்த ஜூலை 4 ஆம் தேதி உத்தரவிட்டது.

இவா் நேரடியாக இந்திய வனப்பணி (ஐ.எஃப்.எஸ்.) தோ்வு மூலம் தோ்வு செய்யப்பட்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT