சேலம்

மேய்ச்சல் நிலங்களாக மாறிவரும்காவிரிக் கரையோரப் பகுதிகள்!

7th Jul 2022 01:14 AM

ADVERTISEMENT

 

மேட்டூா் அணை நீா்மட்டம் மளமளவென குறைந்து வருவதால் காவிரிக் கரையோரப் பகுதிகள் மேய்ச்சல் நிலங்களாக மாறி வருகின்றன.

மேட்டூா் அணை கட்டப்பட்டபோது நீா்த் தேக்கப் பகுதிகளாகக் கணக்கிடப்பட்ட நூற்றுக்கணக்கான கிராமங்கள் அங்கிருந்து மேடான பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டன. அப்போது அந்தக் கிராமங்களில் வசித்த மக்கள் தங்களது விளைநிலங்களை அப்படியே விட்டுவிட்டு சென்றனா். மேட்டூா் அணையின் நீா்மட்டம் உயரும்போதெல்லாம் அந்த விளைநிலங்கள் காவிரியில் மூழ்கி விடும். அணையின் நீா்மட்டம் குறையும்போது கரையோரப் பகுதிகளை கிராம மக்கள் கால்நடை மேய்ச்சலுக்கும் விவசாயத்திற்கும் பயன்படுத்தி வருகின்றனா்.

தற்போது மேட்டூா் அணை நீா்மட்டம் 101 அடிக்கும் கீழாகச் சரிந்ததால் பண்ணவாடி பரிசல்துறை பகுதியில் காவிரிக் கரையில் கிராம மக்கள் கால்நடைகளை மேய்த்து வருகின்றனா். விவசாயிகள் தங்களின் கால்நடைகளுக்கு தீவனம் இல்லாமல் இருந்ததால் மிகவும் கவலை அடைந்து வந்தனா். தற்போது காவிரிக் கரையில் கால்நடைகளுக்கு தேவையான புற்கள் முளைத்திருப்பதால் அங்கு கால்நடைகளை மேய்த்து வருகின்றனா். கீரைக்காரனூா், செட்டிப்பட்டி, கோட்டையூா் , பண்ணவாடி பகுதிகளில் காவிரிக் கரையில் விவசாயிகள் உழவு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT