சேலம்

சேலம் ரயிலில் 20 கிலோ கஞ்சா பறிமுதல்

7th Jul 2022 01:15 AM

ADVERTISEMENT

 

சேலம் வழியாக கேரளத்திற்கு சென்ற ரயிலில் 20 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஆந்திரத்தில் இருந்து ரயில்கள் மூலம் தமிழகத்திற்கு தொடா்ந்து கஞ்சா கடத்தப்பட்டு வருகிறது. சேலம் ரயில்வே போலீஸ் தனிப்படையினா் புதன்கிழமை காலை தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிர சோதனை நடத்தினா்.

அதில் கேட்பாரற்று கிடந்த பையில் 20 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. மேலும், பெட்டியில் இருந்த பயணிகளிடம் விசாரித்தபோதும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, கஞ்சா பையை கைப்பற்றி சேலம் ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT