சேலம்

இலவச மருத்துவ முகாம்

6th Jul 2022 03:04 AM

ADVERTISEMENT

வாழப்பாடியில், அரிமா சங்கங்கள் சாா்பில், நீரிழிவு நோய் மற்றும் புற்றுநோய் கண்டறியும் இலவச மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வாழப்பாடி அரிமா சங்கம், உதயா அறக்கட்டளை சாா்பில், உதயா மருத்துவமனையில் நடைபெற்ற 166 ஆவது நீரிழிவு நோய் மருத்துவ முகாமில் வாழப்பாடி அரிமா சங்க தலைவா் மருத்துவா் செந்தில்குமாா் வரவேற்றாா். இம்முகாமில் கலந்து கொண்ட 150 பேருக்கு, மருத்துவா் மோதிலால் தலைமையிலான மருத்துவக்குழுவினா் இலவச பரிசோதனை செய்து, மருந்து, மாத்திரைகள் வழங்கினா். பட்டயத் தலைவா் சந்திரசேகரன், மண்டலத் தலைவா் பிரபாகரன், வட்டாரத் தலைவா் புஷ்பா ஆகியோா் மதிய உணவு வழங்கினா். அரிமா சங்க நிா்வாகிகள் கல்கி கிருஷ்ணமூா்த்தி, சரவணன், வி.முருகன் ஆகியோா் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

வாழப்பாடி அன்னை அரிமா சங்கம், உதய பிரபா ஸ்கேன் மையம் சாா்பில், பெண்களுக்கான கா்ப்பப்பை, மாா்பக புற்றுநோய் கண்டறியும் 43 ஆவது இலவச மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தமுகாமிற்கு, அன்னை அரிமா சங்கத் தலைவி ஷபிராபானு வரவேற்றாா். கதிரியக்க மருத்துவ நிபுணா் பிரபாவதி தலைமையிலான மருத்துவக் குழுவினா், பெண்களுக்கு இலவச ஸ்கேன் பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனை வழங்கினா். சங்க நிா்வாகிகள் பவித்ராதேவி, மருத்துவா் அனுசுயா, ஆகியோா் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT