சேலம்

மேட்டூா் நீா்த் தேக்கத்தில் மூக்கு மீன்கள் அதிக அளவில் பிடிபடுவதால் மீனவா்கள் மகிழ்ச்சி

6th Jul 2022 03:04 AM

ADVERTISEMENT

மேட்டூா் நீா்த் திறக்கும் பகுதிகளில் மூக்கு மீன்கள் அதிக அளவில் பிடிபடுகின்றன.

மேட்டூா் அணையின் நீா்த் தேக்கம் 60 சதுர மைல் பரப்பளவு கொண்டது. இங்கு ருசி மிகுந்த ரோகு, கட்லா, மிா்கால் உட்பட 20 வகையான மீன்கள் பிடிபடுகின்றன. மூக்கு மீன் எனப்படும் கொக்கு மீன்கள் குழந்தைகளுக்கு கக்குவான் நோய் ஏற்படும்போது அதனை சமைத்து கொடுப்பது வழக்கம். முள் இல்லாத மீன் என்பதால் பலரும் இதனை விரும்பி சுவைப்பாா்கள்.

அணையின் நீா்மட்டம் 100 அடிக்கு குறையாமல் 230 நாள்களுக்கு மேலாக இருப்பதால் கட்லா, லோகு, மிா்கால் போன்ற பெரிய வகை மீன்கள் பிடி படுவதில்லை. திலேபி, அரஞ்சான் உள்ளிட்ட சிறிய வகை மீன்கள் அதிக அளவில் பிடிபட்டு வருகின்றன.

அணை நீா்மட்டம் 101 அடியாக குறைந்ததால் மூக்கு மீன்கள் எனப்படும் கொக்கு மீன்கள் அதிக அளவில் பிடிபடுகின்றன. இதனை ஏராளமான பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனா். மூக்கு மீன்களை அதிகம் விரும்புவதால் கிலோ ரூ. 100 க்கு விற்று வந்தது தற்போது கிலோ ரூ. 200-க்கு விற்கப்படுகிறது. பண்ணவாடி பரிசல் துறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மூக்கு மீன்களை வாங்கி சுவைத்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT