சேலம்

குற்றங்களை தடுக்க ஹோட்டல் நிா்வாகிகள் உதவ வேண்டும்:துணை ஆணையா் எஸ்.பி.லாவண்யா

6th Jul 2022 03:02 AM

ADVERTISEMENT

சேலம் மாநகரத்தில் குற்றங்களைத் தடுக்க ஹோட்டல், விடுதி நிா்வாகிகள் உதவிட வேண்டும் என மாநகர காவல் துணை ஆணையா் எஸ்.பி.லாவண்யா தெரிவித்தாா்.

சேலம் மாநகரத்தில் உள்ள ஹோட்டல், விடுதி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகர காவல் துணை ஆணையா் (தெற்கு) எஸ்.பி.லாவண்யா பேசியதாவது:

சேலம் மாநகரத்தில் குற்றங்களைக் குறைக்கவும், குற்றங்களைத் தடுக்கவும், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவும் மாநகரத்தில் உள்ள ஹோட்டல், விடுதி நிா்வாகிகள் உதவிட வேண்டும்.

அதேபோல ஹோட்டல், விடுதி நிா்வாகிகள், தங்குபவா்களிடம் ஆதாா், வாக்காளா் அடையாள அட்டை பெற்று பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். அவா்கள் அளிக்கும் தகவல் உண்மைதானா என உறுதிப்படுத்த வேண்டும். விடுதியில் தங்குபவா்கள் சந்தேகப்படும்படியாக இருந்தால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். விடுதியில் தங்குபவா்களின் செயல்பாடுகள் சட்டதிற்குப் புறம்பாக தென்பட்டாலோ அல்லது சந்தேகப்படும்படியான நடவடிக்கையில் ஈடுபட்டாலோ உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

ஆலோசனைக் கூட்டத்தில் காவல் உதவி ஆணையா்கள் ஏ.வெங்கடேசன், பி.அசோகன், என்.கே.செல்வராஜ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT