சேலம்

வாழப்பாடியில் பாஜகவினா் உண்ணாவிரதப் போராட்டம்

6th Jul 2022 03:03 AM

ADVERTISEMENT

வாழப்பாடியில், திமுக அரசை கண்டித்து சேலம் கிழக்கு மாவட்ட பாஜக சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்தில் வாழப்பாடி தெற்கு ஒன்றியத் தலைவா் எல்.மணிகண்டன் வரவேற்றாா். சேலம் கிழக்கு மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் பி.சண்முகநாதன் தலைமை வகித்தாா். மாநில மருத்துவா் அணி தலைவா் எஸ்.டி.பிரேம்குமாா், தேசிய பொதுக்குழு உறுப்பினா் ஏ.சி.முருகேசன், மாநில செயற்குழு உறுப்பினா் வழக்குரைஞா் க.மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, மக்களுக்கு கொடுத்த தோ்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த வேண்டும். பல்வேறு காரணங்களைக் கூறி ரத்து செய்யப்பட்ட முதியோா் உதவித்தொகையை மீண்டும் பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி பலரும் பேசினா்.

இக்கூட்டத்தில், இளைஞரணி மாவட்டத் தலைவா் குணசேகரன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் கலந்து கொண்டனா். நிறைவாக, வடக்கு ஒன்றியத்தலைவா் பி.ஆா்.முரளி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

கருப்புச்சட்டை அணிந்த பாஜக இளைஞரணியினா்:

பாஜக உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட 20க்கும் மேற்பட்ட இளைஞரணி நிா்வாகிகள், திராவிடா் கழகத்தினரைப்போல கருப்புச்சட்டை அணிந்திருந்தது ஆழ்த்தியது.

சேலம் கிழக்கு மாவட்ட தலைவா் வழக்குரைஞா் பி. சண்முகநாதன் பேசுகையில், ‘திராவிடா்கள் என்ற வாா்த்தையை பயன்படுத்தி ஒரு கூட்டம் தமிழா்களை ஏமாற்றி வருகிறது. பாஜகவைச் சோ்ந்த இளைஞா்களும் கருப்புச்சட்டை அணிந்து இந்த அறப்போராட்டத்தில் கலந்து கொண்டது திராவிடக் கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தும்’ என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT