சேலம்

அரசுப் பள்ளிகளில் தற்காலிகப் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

DIN

சேலம் மாவட்ட அரசுப் பள்ளிகளில் 2022-23-ஆம் கல்வியாண்டிற்கான முற்றிலும் தற்காலிகப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் வெளியிட்ட செய்தி:

சேலம் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும், ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2022-23-ஆம் கல்வியாண்டில் 2022 ஜூன் 1 ஆம் தேதி நிலவரப்படி தேவையாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியா் பணிகளுக்கு தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியா் சேவைக்கு தெரிவு மேற்கொள்ளப்பட உள்ளது.

தகுதியான விண்ணப்பதாரா்கள் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய கல்வித் தகுதிச் சான்றுகளுடன் தொடா்புடைய மாவட்டக் கல்வி அலுவலரிடம் ( ஈண்ள்ற்ழ்ண்ஸ்ரீற் உக்ன்ஸ்ரீஹற்ண்ா்ய்ஹப் ஞச்ச்ண்ஸ்ரீங்ழ்) சமா்ப்பிக்க வேண்டும்.

இது சாா்பான காலிப் பணியிட விவரங்கள் முதன்மைக் கல்வி, மாவட்டக் கல்வி, வட்டாரக் கல்வி அலுவலகங்ககளின் அறிவிப்புப் பலகையில் ஜூலை 2 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மற்றும் நேரம் ஜூலை 6 ஆம் தேதி மாலை 5 மணி ஆகும். குறித்த நேரத்திற்குப் பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. தகவல் பலகையில் வெளியிடப்படும் காலிப்பணியிட விவரங்கள் மாறுதலுக்குட்பட்டது.

இது முற்றிலும் தற்காலிகமான சேவை தெரிவு ஆகும். இதற்கு தெரிவு செய்யப்படுவோா் பணி நிரந்தரம் அல்லது அரசுப் பணி ஏதும் இதை முன்னிறுத்தி கோர இயலாது.

பூா்த்தி செய்த விண்ணப்பங்களை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நத்தம்: குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்கு இயந்திரங்கள்!

ருவாங் எரிமலை!

அண்ணாமலை வெற்றி பெற விரலை துண்டித்த பா.ஜ.க. பிரமுகர்!

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

SCROLL FOR NEXT