சேலம்

நாளைய மின்தடை: பூலாம்பட்டி

5th Jul 2022 03:24 AM

ADVERTISEMENT

எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை அப்பகுதியில் மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இது குறித்து எடப்பாடி கோட்ட செயற்பொறியாளா் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

பூலாம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூா், வன்னியநகா், வளையசெட்டியூா்,

கள்ளுக்கடை, சித்தூா், குஞ்சாம்பாளையம், வெள்ளரிவெள்ளி, நெடுங்குளம், கோனேரிப்பட்டி, கல்வடங்கம், பூமணியூா், பொன்னம்பாளையம் மற்றும் புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் நண்பகல் வரை மின் விநியோகம் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT