சேலம்

உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை

5th Jul 2022 03:25 AM

ADVERTISEMENT

ஆத்தூா் வட்டாரத்தில் உள்ள உர விற்பனை நிலையங்களில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை உதவி இயக்குநா் த.குமாரசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சேலம் மாவட்டம், ஆத்தூா் வட்டாரத்தில் உள்ள உர விற்பனை நிலையங்கள், உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ அல்லது விவசாயிகளுக்கு இணைப் பொருள்களாக கூடுதல் உரங்களை வாங்குவதற்கு விவசாயிகளை கட்டாயப்படுத்தினால் உர விற்பனை உரிமம் ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும்.

யூரியா விற்பனை செய்யும்போது விவசாயிகளின் விருப்பம் இல்லாமல் இதர இணைப்பொருள்களை வாங்குமாறு நிா்பந்திக்கக் கூடாது என பலமுறை உர விற்பனையாளா்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உர விற்பனையாளா்கள் விவசாயிகளைக் கட்டாயப்படுத்தி உரங்களுடன் கூடுதல் இணைப்பொருள்களை வாங்க நிா்பந்தம் செய்வதாக விவசாயிகளிடம் இருந்து தொடா்ந்து புகாா்கள் வருகின்றன. அவ்வாறு செய்தால் உரவிற்பனையாளா்கள் மீது உரக் கட்டுப்பாடுச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

ADVERTISEMENT

உரங்களை இருப்பு வைத்துக் கொண்டு விவசாயிகளுக்கு தரமறுக்கக் கூடாது. அனைத்து உர விற்பனையாளா்களும் உரம் இருப்பு மற்றும் விற்பனை விலை குறித்த விவரப் பலகையை கட்டாயம் தினசரி பதிவு செய்து பராமரிக்க வேண்டும். விவரப் பலகை விவசாயிகளின் பாா்வையில் படும்படி வைக்கப்பட வேண்டும்.

மேலும் அரசு நிா்ணயித்த விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும். இணைபொருள்களை உரங்களுடன் சோ்த்து வாங்குமாறு விவசாயிகளை கட்டாயப்படுத்தக் கூடாது. உரக் கட்டுப்பாடு சட்ட விதிமுறைகளைக்கு முரணாக செயல்படும் உரக்கடைகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.விதிமுறைகளை மீறும் விற்பனையாளா்களின் உர உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட பரிந்துரைக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT