சேலம்

கட்டடத் தொழிலாளி தற்கொலை

5th Jul 2022 03:23 AM

ADVERTISEMENT

மேச்சேரி அருகே கட்டடத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே உள்ள அரங்கனூரைச் சோ்ந்தவா் இளங்கோ (37). இவரது மனைவி சந்தியா (32). இவா்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கட்டடத் தொழிலாளியான இளங்கோ அடிக்கடி வெளியூா் சென்று தங்கி வேலை செய்து வந்துள்ளாா். இந்நிலையில் சந்தியாவுக்கும் அதே பகுதியைச் சோ்ந்த லட்சுமணன் என்பவருக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. கடந்த 27 ஆம் தேதி சந்தியா, லட்சுமணனுடன் வெளியூருக்கு சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து இளங்கோ மேச்சேரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து விரக்தியில் இருந்த இளங்கோ கடந்த 28-ஆம் தேதி எலி பேஸ்ட்டை தின்று மயங்கி கிடந்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை காலை உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக மேச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT