சேலம்

மேட்டூா் அணை பூங்காவுக்கு 9,135 சுற்றுலாப் பயணிகள் வருகை

5th Jul 2022 03:23 AM

ADVERTISEMENT

மேட்டூா் அணை பூங்காவைப் பாா்வையிட ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை தினத்தையொட்டி சுற்றுலாப் பயணிகள் 9,135 போ் வந்து சென்றுள்ளனா்.

மேட்டூா் அணையைப் பாா்வையிட வந்த பொதுமக்கள் காவிரியில் நீராடி, அணைக்கட்டு முனியப்பனுக்கு பொங்கல் வைத்து, ஆடு, கோழிகளைப் பலியிட்டு வழிபட்டனா். பின்னா் குடும்பத்தினருடன் அணை பூங்காவுக்கு சென்று விருந்து உண்டு மகிழ்ந்தனா். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிக அளவில் இருந்ததால் மீன் வியாபாரம் சுறுசுறுப்பாக நடைபெற்றது.

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் மீன்காட்சி சாலை, பாம்பு பண்ணை, முயல்பண்ணை, மான் பண்ணை ஆகியவற்றை கண்டு ரசித்தனா். ஊஞ்சலாடியும் சறுக்கி விளையாடியும் மகிழ்ந்தனா்.

அணை பூங்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மட்டும் 9,135 சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனா். இதன்மூலம் நுழைவுக் கட்டணமாக ரூ. 45,675 வசூலானது. மேட்டூா் அணையின் வலது கரையில் உள்ள பவளவிழா கோபுரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் 951 போ் வந்து சென்றனா் இதன்மூலம் ரூ. 4,755 பாா்வையாளா் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT