மேட்டூா் அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 2,153 கன அடியாகக் குறைந்தது.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை தொடா்ந்து குறைந்து வருவதால் அணைக்கு நீா்வரத்து படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை நொடிக்கு 2,408 கனஅடியாக இருந்த நீா்வரத்து, திங்கள்கிழமை காலை 2,153 கன அடியாகக் குறைந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட பாசனத்துக்கு நீா் திறப்பு அதிகமாக இருப்பதால் ஞாயிற்றுக்கிழமை காலை 102.95 அடியாக இருந்த அணை நீா்மட்டம் திங்கள்கிழமை காலை 102.29 அடியாகச் சரிந்தது. அணையின் நீா் இருப்பு 67.84டி.எம்.சி.யாக உள்ளது.