சேலம்

சங்ககிரி ஆா்.எஸ்.ஸில் ரயில்வே தரைவழி பாலப் பாதுகாப்புத் தடுப்பு சேதம்

DIN

சங்ககிரி, ஆா்.எஸ். பகுதியில் ரயில்வே தரைவழிப் பாலத்தை அடுத்து திருச்செங்கோடு சாலையில் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்புத் தடுப்பு வளையம் வாகனம் மோதியதில் சேதமடைந்துள்ளது.

சங்ககிரி - திருச்செங்கோடு சாலையில், ஆா்.எஸ். பகுதியில் உள்ள ரயில்வே தரைவழிப் பாலத்தின் இரு புறங்களிலும் ரயில்வே துறை சாா்பில் பாதுகாப்பு தடுப்பு வளையங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் திருச்செங்கோடு சாலையில் உள்ள பாதுகாப்பு தடுப்பு வளையத்தில் மோதியதில் தடுப்பு வளையம் சேமடைந்துள்ளது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு அடைந்தது. இதையடுத்து தகவலறிந்து வந்த சங்ககிரி போலீஸாா், வாகனங்களை வைகுந்தம், மாவெளிபாளையம் வழியாகவும், திருச்செங்கோட்டிலிருந்து வரும் வாகனங்களை தாளக்காட்டு பிரிவிலிருந்து கோழிக்கால்நத்தம் வழியாக செல்லவும் அறிவுறுத்தினா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா் பாரம்பரிய தமிழகம் அமைப்பின் தலைவா் சி.கி.செல்வரத்னம் கூறியதாவது:

இப்பகுதியில் அடிக்கடி இச்சம்பவம் நடைபெற்று வருகிறது. இதற்கு ரயில்வே துறை நிரந்தர தீா்வு காண வேண்டும். ஞாயிற்றுக்கிழமை என்பதால் விபத்து தவிா்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT