சேலம்

பெண்களுக்கான இலவசப் பயணத் திட்டத்தால் போக்குவரத்துக்கழகத்திற்கு எந்த இழப்பும் இல்லை: அமைச்சர் சிவசங்கர்  

DIN

பெண்களுக்கான இலவசப் பயணத் திட்டத்தால் போக்குவரத்துக்கழகத்திற்கு எந்த இழப்பும் இல்லை என்று போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

போக்குவரத்துக்கழகத்தை மேம்படுத்துவது குறித்து அரசு போக்குவரத்துக்கழக மண்டல மேலாளர்கள் மற்றும் கிளை மேலாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் சேலம் கோட்ட அரசுப் போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். கிராமப்புறங்களில் பேருந்து செல்லாத இடங்களுக்கு புதிய வழித்தடத்தில் பேருந்துக்களை இயக்குவது, அதிக மக்கள் பயன்படுத்தும் பேருந்து வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்குவது, பள்ளி மற்றும் கல்லூரி பகுதிகளில் பேருந்துகளில் எண்ணிக்கையை உயர்த்துவதோடு மாணவ, மாணவிகள் பாதுகாப்பாக பயணம் செய்வதை உறுதி செய்வது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. 

தொடர்ந்து செய்தியாளர்களுளுக்கு பேட்டி அளித்த போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர், முதல்வரின் உத்தரவுபடி போக்குவரத்துக் கழகத்தினை மேம்படுத்த மண்டல வாரியாக அதிகாரிகளுடன் கூட்டங்கள் நடத்தி அதனை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்று சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் உடனான ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அரசு பேருந்துகளில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெண்களுக்கு இலவசம் என்பதால் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவியர்களின் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்ற தமிழக அரசின் அறிவிப்பு காரணமாக அரசு கல்லூரிகளில் மாணவிகள் சேர்க்கை அதிகரித்துள்ளது என்றார். 

இதனைக் கருத்தில் கொண்டு அந்த வழித்தடங்களில் பேருந்துகள் எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் எங்கெங்கு பேருந்துகள் தேவைப்படுகிறது என்பதை அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் கொண்ட வாட்ஸ்அப் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த குழுவில் தலைமை ஆசிரியர்கள் தங்கள் தேவைகளை பதிவு செய்தால் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். தமிழக அரசின் பெண்களுக்கான இலவச பயணத் திட்டத்தால் போக்குவரத்துக் கழகத்திற்கு எந்த இழப்பும் இல்லை என்றும் தமிழக அரசு இதற்கான இழப்பீடான 1600 கோடி ரூபாய் ஏற்கனவே போக்குவரத்துத் துறைக்கு வழங்கி விட்டதாகவும் கூடுதலாக தேவைப்படும் நிதியை தமிழக அரசிடம் கேட்டுப் பெறுவோம் என்றார்.

கிராமப்புறங்களில் புதிய பேருந்துக்களை விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அரசுப் போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் புதிய பேருந்துகள் வாங்க ஜெர்மனி நாட்டுடன் ஒப்பந்தம் போடப்பட்டு விரைவில் அதற்கான ஒப்பந்த புள்ளி வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

SCROLL FOR NEXT