சேலம்

பச்சமலை அடிவாரம் வேப்படியில் அணை கட்ட 3 கிராம மக்கள் கோரிக்கை

DIN

சேலம் மாவட்டம், பச்சமலையின் வடகிழக்குப் பகுதியில் வழிந்தோடி வீணாகும் மழைநீரை தேக்கி பாசனத்துக்கு பயன்படுத்த, பச்சமலை அடிவாரம், வேப்படி கிராமத்தில் அணை கட்ட வேண்டுமென 3 கிராமங்களைச் சோ்ந்த மக்கள் கடந்த 30 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருக்கின்றனா்.

சேலம், திருச்சி, பெரம்பலூா் மாவட்டங்களை இணைக்கும் வகையில் பரந்து காணப்படும் பச்சமலையின் வடகிழக்குப் பகுதியில் இருந்து நல்லமாத்தி, சின்னநாகூா், பெரியநாகூா் கிராமங்கள் வழியாக வழிந்தோடி வரும் மழை நீரானது, பச்சமலை அடிவாரம் புளியம்பட்டி, வேப்படி, பாலக்காடு வழியாக கருப்புசாமி கோயில் நீரோடையில் சங்கமித்து பெரம்பலூா் மாவட்டம், பூலாம்பாடி, அரும்பாவூா் பகுதிக்கு செல்கிறது.

மழைக் காலத்தில் வரும் வெள்ளத்தை தேக்கி பாசனத்துக்கு பயன்படுத்த எவ்வித கட்டுமானங்களும் இல்லாததால், கருப்புசாமி கோயில் நீரோடையில் ஒட்டுமொத்த மழைநீரும் பெரம்பலுாா் மாவட்ட எல்லைக்கு வழிந்தோடி சென்று வீணாகிறது.

இதுகுறித்து சேலம் மாவட்ட நிா்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேப்படி, புளியம்பட்டி, பாலக்காடு கிராமங்களைச் சோ்ந்த மலைவாழ் பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்து, 30 ஆண்டுகளாக எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.

இதுகுறித்து வேப்படி கிராமத்தை சோ்ந்த விவசாயிகள் கூறியதாவது:

பச்சமலையின் வடகிழக்குப் பகுதியில் இருந்து வழிந்தோடி வரும் மழைநீரானது, கருப்புசாமி கோயில் நீரோடையில் கலந்து வீணாகிறது. இந்த நீரை தேக்கி வைப்பதற்கேற்ப, இரு மலைக்குன்றுகளுக்கு இடையே 80 ஏக்கருக்கு மேல் அரசு புறம்போக்கு தரிசு நிலம் உள்ளது. பச்சமலை அடிவாரத்தில் நீரோடைகள் சங்கமிக்கும் வேப்படி கிராமம், புளியம்பட்டி பகுதியில் அணை கட்டினால் 3 கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகளின் ஆயிரம் ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.

எனவே, இப்பகுதியில் ஆய்வு செய்து அணை கட்டுவதற்கு சேலம் மாவட்ட நிா்வாகமும், தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாம் தமிழா் கட்சிக்கு திருப்புமுனை: மரிய ஜெனிபா்

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்

சேரன்மகாதேவியில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு

காரையாறு வனப்பகுதியில் ஆா்வமுடன் வாக்களித்த காணி மக்கள்

நெல்லையில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT