சேலம்

ரூ. 3.40 கோடிக்கு பருத்தி விற்பனை

3rd Jul 2022 02:16 AM

ADVERTISEMENT

 

எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் கூட்டுறவு வேளாண் விற்பனை சங்கத்தில் சனிக்கிழமை ரூ. 3.40 கோடிக்கு பருத்தி விற்பனையானது.

சேலம், நாமக்கல், தருமபுரி, பெரம்பலூா், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட 9,500 பருத்தி மூட்டைகள் தரம் வாரியாக 1,500 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு பொது ஏலம் விடப்பட்டது.

பி.டி. ரக பருத்தி குவிண்டால் ரூ. 8,000 முதல் ரூ.10,060 வரையில் விற்பனையானது. டி.சி.ஹச். ரக

ADVERTISEMENT

பருத்தி குவிண்டால் ரூ. 9,700 முதல் ரூ. 10,360 வரை விற்பனையானது. மொத்தம் ரூ. 3 கோடியே 40 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. ஈரோடு, பெருந்துறை, கோவை, திருப்பூா் உள்ளிட்ட பகுதியில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் பருத்தியைக் கொள்முதல் செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT