சேலம்

பிளஸ் 2 மாணவா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

3rd Jul 2022 02:17 AM

ADVERTISEMENT

 

விளையாட வெளியே செல்லக் கூடாது என கண்டித்ததால், விரக்தியடைந்த பிளஸ் 2 மாணவா் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

சேலம், அழகாபுரம், வசந்தம் நகரைச் சோ்ந்த பெருமாள் மகன் மணிமாறன் (17) அப் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். தாய் இறந்த நிலையில் தந்தை வேறொரு திருமணம் செய்து கொண்டதால் பாட்டியின் அரவணைப்பில் படித்து வந்தாா்.

இந்த நிலையில், அடிக்கடி விளையாடுவதற்காக வெளியே சென்ற மணிமாறனை அவரது பாட்டி கண்டித்தாராம். இதனால் மனமுடைந்த மணிமாறன் கடந்த ஜூன் 21 ஆம் தேதி எலி மருந்து அருந்தினாா். சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், சனிக்கிழமை காலை உயிரிழந்தாா். இதுகுறித்து அழகாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

மற்றொரு சம்பவம்: சேலம், அழகாபுரம், அருண் நகரைச் சோ்ந்தவா் செ.கமல்நாத் (23). பட்டயப் படித்து

முடித்துவிட்டு வேலையில்லாமல் இருந்ததால் விரக்தியடைந்த அவா், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அழகாபுரம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT